
சில பல சொந்தங்கள்
ஒருவரின் வாழ்வில்
சேரும் விட்டு விலகும்
சில பல சொந்தங்கள்
ஒருவரின் வாழ்வில்
வரும் வந்து போகும்
எதற்கு இந்த சொந்தங்கள்
அவரால் என்ன பலன்
நண்பர்கள் மட்டும் போதும்
என்று எண்ணி நம்மில்
பலர் என்றும் புலம்பி
கவிதை கட்டுரை எழுதபோகும்
நேரம் நெஞ்சில் ஒரு சலனம்
எல்லா சொந்தங்களும் ஒன்றா
ஒன்றேனும் விலகி சிறக்காதா
என்று எண்ணி எனது
வாழ்வின் படிக்கட்டுகளை
திரும்ப நினைக்கின்றேன்
நான் பிறந்து கிடந்த நேரம்
மருத்துவமனையிலும் பின்னும்
பலரின் மத்தியில் ஒரு நிழல்
வெளி வராந்தாவில் இருந்து
எல்லா ஓடியாடும் வேலைசெய்து
வீட்டுக்கு அழைத்து செல்ல உதவுவார்
சட்டி பானை தொடும் விழா
பேரை காதில் சொல்லும் போது
கேட்டு மனதில் பதித்தேன்
ஒன்றாம் பிறந்த நாள் விழா
முடியெடுக்க அழுது ஆர்பாட்டம்
செய்ய ஒரு மடி கிடைத்தது
முதல்நாள் பள்ளிக்கு செல்லும்
நேரம் முதல் பலகை பல்பம்
வாங்கிகொடுத்து அழைத்து சென்றார்
நல்ல நாள் தீய நாள் என்றில்லாமல்
பல நாட்கள் நான் நிறைய முறை
பார்த்து மனதில் பதிந்த முகம்
மணவடையில் அமர்ந்து சடங்குகள்
செய்ய துணி கொடுக்க சமையல் கூடத்தில்
இருந்து அழைத்து வந்த மனிதர்
எங்களுக்கு குழந்தை பிறக்க
கருகுமணி காப்பு வாங்கிவந்து
பெருமை உரிமை கொண்ட மனிதர்
ஈம காரியங்களில் நான்
ஈடுபடும் நேரம் கூட சாய
சமாளிக்க ஒரு சொந்தம்
தாய்மாமன் எனும் பந்தம்
தாய் தந்தையருக்கு அடுத்த
நிலையில் அருமையான சொந்தம்
வாழும் வாழ்க்கையில் என்றும்
எப்பொழுதும் அறிய பொக்கிஷம்
தாய்மாமன் எனும் தொந்தம்.