தாய் உயிரிழந்தது தெரியாமல் அழுகிய சடலத்துடன் வாழ்ந்த மகளும் பலி..!! அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள டசன்ஹடி குண்டாபுர தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெண்மணி ஜெயந்தி ஷெட்டி (வயது 62). இவர் தனது மகள் பிரகதி ஷெட்டியுடன் (வயது 32) வசித்து வருகிறார்.

பிரகதி ஷெட்டிக்கு மனநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தாயும் மகளும் ஒன்றாக வசித்து வந்தனர். இதனிடைய கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஜெயந்தி உடல் நலக்குறைவினால் உயிரிழந்து உள்ளார். தனது தாயார் உயிரிழந்த தகவல் கூட அறியாத பிரகதி ஷெட்டி கடந்த நான்கு நாட்களாக உயிரிழந்த தாயின் சடலத்துடன் மகள் வசித்து வந்தார்.

இதனால் அவருக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டு பரிதாபாய் உயிரை இழந்துள்ளார். இவர்களின் வீட்டிலிருந்து பயங்கர துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

12 வயதிலேயே ஆபாச தளத்தில் லீக்கான போட்டோ – நடிகை ஜான்வி கபூர் ஓபன்டாக்.!!

Read Next

ஏசி பெட்டியில் அத்துமீறி நுழைந்து இருவர் கும்பலால் பெண் பலாத்காரம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular