தாய் திட்டியதில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது..
சென்னை தாம்பரம் அடுத்த மப்பேட்டில் தாய் கண்டித்ததால் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இந்த மாணவியின் தாயார் வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகின்ற நிலையில் தனது மகளிடம் அக்கம் பக்கம் வீட்டாரிடம் அதிகம் பழக வேண்டாம் பேச வேண்டாம் என்று சொன்னதை ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி தவறாக புரிந்து கொண்டு தன்னை கண்டித்ததாக நினைத்து தன் தாயிடம் கோபித்து தாய் இல்லாத நேரம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார், இந்த செய்தி அறிந்த அந்த தாய் பெரும் அதிர்ச்சி அடைந்தார், மேலும் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்…!!!