தாலிக்கயிற்றை எந்தெந்த கிழமைகளில் மாற்ற வேண்டும்..??
தாலி என்பது ஒரு பெண்ணிற்கு முக்கியமான புனிதமான ஒன்று. குறிப்பாக இந்து மதத்தில் தாலி என்பது மிகவும் புனிதமான ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது. இந்நிலையில், நாம் அணிந்து கொண்டிருக்கும் தாலி கயிற்றை ஒரு ஆண்டுக்கு இருமுறையாவது மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் தாலிக்கயிற்றை மஞ்சள் கயிறு போட்டு தான் தாலியையும் சரி அந்த கயிறையும் சரி போட்டு இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் சிலர் தாலி சரடு சங்கத்தில் வாங்கிக் கொள்கிறார்கள். மாங்கல்யத்தை மட்டும் மஞ்சள் கயிற்றில் கோர்த்து போட்டுக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் அந்த மஞ்சள் கயிருக்கு பதிலாக கூட தங்க கம்பியில் கோர்த்து போட்டுக் கொள்கிறார்கள். சிலர் வெள்ளிக் கம்பியில் மாங்கல்யத்தை போட்டு கோர்த்து சரடையில் சேர்த்து போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் எது சிறந்தது என்றால், ஜோதிட சாஸ்திரத்தின் படி தாளி சரடில் சிறிது மஞ்சள் கயிறு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே மஞ்சள் கயிற்றில் மாங்கல்யத்தை போற்று தாலி சரடு சேர்த்து போடுவது மிகவும் நல்லது. இந்த தாலி கயிற்றை வருடத்திற்கு இரண்டு முறை மாற்ற வேண்டும். குறிப்பாக ஆடிப்பெருக்கில் தாலிக்கயிற்றை மாற்றுவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், தாலிக்கயிற்றை எப்போது மாற்றலாம் மாற்றுவதற்கான நேரம் எந்த நேரம் என்பதை பற்றி எல்லாம் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தாலி கயிறு என்பது ஒரு புனிதமான ஒன்று என்பதால் அதை நான் கிழமை நல்ல நேரம் கெட்ட நேரம் இது எல்லாம் பார்த்து தான் மாற்ற வேண்டும். சுபமுகூர்த்த நாள், மேல்நோக்கு நாள், சித்தயோகம் அமிர்த யோகம் என அனைத்தும் கூடிவரும் அந்த சுபநாளில் தான் தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும். மேலும் வருடத்திற்கு இருமுறை மட்டுமே தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும் அடிக்கடி தாலிக்கயிற்றை மாற்றுவது அவ்வளவு சிறப்புடையது இல்லை. திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் தாலிக்கயிற்றை மாற்றலாம். இந்தக் கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தாலிக்கயிற்றை மாற்றுவது மிகவும் விசேஷமானதாக இருக்கும். மேலும், தாலிக்கயிறு மாற்றும் போது திசை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தாலிக்கயிற்றை மாற்றும்போது நாம் கிழக்கு திசை நோக்கி தான் அமர்ந்திருக்க வேண்டும். மற்றும் தாலிக்கயிற்றை மாற்றும்போது கணவன் நம்முடன் இருப்பது மிகவும் நல்லது. தாலிக்கயிறு மாற்றும் போது ஒருபோதும் பாதியிலேயே எழுந்திருக்கக் மேலும், கர்ப்பிணி பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தாலி கைற்றை மாற்றக்கூடாது. தாலிக்கயிறு மாற்றிவிட்டு பூஜை அறையில் சென்று வணங்கி விட்டு அதன் பின்னரே மற்ற வேலைகளை பார்க்கலாம்.




