
தஞ்சாவூர்: அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த கவிபாலா (12) சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்ட குடற்புழு நீக்கும், ‘அல்பென்டாசோல்’ மாத்திரையை சாப்பிட்ட 2 மணி நேரத்தில் உயிரிழந்தார். அதை சாப்பிட்டதால் மாணவி இறந்தாரா என கேள்வியெழுந்த நிலையில் இதை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ வினாயகம் மறுத்துள்ளார். இந்நிலையில் மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.