திடீரென கதவை தட்டிய கணவன்..!! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

திருப்பத்தூர் குரிசிலாப்பட்டு அருகே உள்ள குண்டு ரெட்டியூர் என்கின்ற கிராமத்தை சார்ந்தவர் காளிதாஸ். இவர் ஓசூரில் கட்டிட வேலை செய்து வருகின்றார். அதே பகுதியை சார்ந்த 35 வயது உடைய சரவணன், இவர் ஓட்டுநராக இருந்துள்ளார். சரவணன் காளிதாஸ் இருவரும் நண்பர்கள் எனக் கூறப்படுகிறது.

காளிதாஸ் சரவணனுடன் சேர்ந்து வெளியே செல்வது, ஒன்றாக மது அருந்துவது என இருந்துள்ளனர். மேலும் அவரது வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்த நிலையில் காளிதாஸ் மனைவி ரேவதிக்கும், சரவணனுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு தகாத உறவாக மாறியது. இது தெரியவந்த நிலையில் காளிதாஸ் சரவணனை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்டபடில்லை  மேலும் காளிதாஸ் ஓசூருக்கு வேலைக்கு சென்ற நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர்.

நேற்று முன்தினம் சரவணனும், ரேவதியும் வீட்டில் நெருக்கமாக இருந்தனர். இந்நிலையில் காளிதாஸ் எந்த முன்னறிவிப்பும் என்று திடீரென ஓசூரில் இருந்து ஊருக்கு வந்து வீட்டின் கதவை தட்டினார். இந்நிலையில் காளிதாஸ் வந்ததை அறிந்த சரவணன் வீட்டிற்குள் பீரோவுக்கு பின்பு ஒளிந்து கொண்டார். ஆனால் ரேவதி நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காளிதாஸ் வீடு முழுவதும் தேடி பார்த்து சரவணனை கண்டுபிடித்தார். பின் ஆத்திரமடைந்த அவர் ஜல்லி கரண்டி, பீர் பாட்டில் ஆகியவற்றால் சரவணன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்தவர்கள் பலத்த காயமடைந்த சரவணன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாய் சரவணன் உயிர் இழந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Read Previous

குர்குரே வாங்கி தராததால் கணவனிடம் விவாகரத்து கேட்ட மனைவி..!!

Read Next

விளையாட சென்று வீடு திரும்பாத 3 சிறுவர்கள்..!! தேடி அலைந்த பெற்றோருக்கு காத்திருந்த பேரிடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular