
குஜராத் மாநிலத்தில் 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் சச்சின் பாலி கிராமத்தில் ஐந்து -ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள 6 மாடி கட்டிடம் ஒன்று இன்று திடீரென இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏராளமான மக்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு படையினர், காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிப்பாடுகளுக்கு இடையே 10-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்பொழுது உரு பெண் மீட்கப்பட்டுள்ளார், அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.