• September 14, 2024

திடீரென பெய்த தீ மழை – உடலில் தீப்பிடித்து கருகிய மக்கள்..!! பதறவைக்கும் சம்பவம்.!!

பெருநகரங்களில் கேஸ் சேவை என்பதே பெரும்பாலும் குழாய்கள் உதவியுடன் வீடுகளுக்கு வழங்கப்படும். கேஸ் சேவையை பெரும் மக்கள் மாதம் சந்தா வகையில் பணம் செலுத்தி அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான மேலை நாடுகளில் இவ்வாறான செயல்முறை தான் தொடர்கிறது. ஒரு சில சமயங்களில் இவ்வாறான கேஸ் விநியோகம் எங்காவது எதிர்பாராதவிதமான விபத்தை சந்தித்தால் கேஸ் இணைப்பை பெரும் பிற நபர்கள் வீட்டிலும் பெரும் விபத்து ஏற்படும். அந்த வகையில் அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இது எங்கு பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் இல்லாத ஒரு வீடியோவில் சாலை சந்திப்பில் மக்கள் தங்களின் செயல்பாடுகளை மேற்கொண்டு இருந்தனர். அச்சமயம் அங்கு திடீரென மழைபோல தீ கீழே கக்கியது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். சிலர் தீக்காயத்துடன் அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர். தீ விபத்துக்கான காரணங்கள் தெரியாத நிலையில் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பிற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Read Previous

பெற்றோர்களே உஷார் : குழந்தைக்கு எமனாக மாறிய கேரட்..!! துடிதுடித்து இறங்க சோகம்..!!

Read Next

11 வருஷம் வாழ்ந்தது போதும்…!! மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் ஜி.வி பிரகாஷ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular