திடீர் காற்றில் சீட்டுக்கட்டுபோல நொறுங்கி விழுந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்; 7 பேர் படுகாயம், 50 கார்கள் சேதம்..!! வீடியோ உள்ளே..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 மாடி உயரம் கொண்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பு திடீரென சரிந்து விழுந்தது. 50-க்கும் மேற்பட்ட கார்கள் கடுமையாக சேதம். ஏழு பேர் படுகாயம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாடாலா  பகுதியில் 14 மாடி உயரம் கொண்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் உள்ளது. இன்று மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

மக்களை கடந்த சில நாட்களாகவே வாட்டி வதைத்து கொண்டிருந்த  வெயிலுக்கு மத்தியில் திடீர் மழை மக்களை குளுகுளு சூழ்நிலைக்கு உள்ளக்கியது. இதனிடைய 14 மாடிகள் கொண்ட பார்க்கின் அமைப்பு திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பார்க்கிங் பகுதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட கார்கள் கடுமையாக சேதம் அடைந்தன. அப்பகுதியில் இருந்த ஏழு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Read Previous

#Breaking: பிரம்மாண்டமான விளம்பர பேனர் சரிந்து பயங்கரம்..!! 35 பேரின் நிலை என்ன..? சூறாவளி காற்றால் பகீர்..!!

Read Next

பஸ் கடைசி சீட்டில் பலான வேலை பார்த்த இளம் காதல் ஜோடி..!! பயணி எடுத்த வீடியோ வைரல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular