
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் பணிகளும் பொறுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு பணி அமைத்தப்பட்டுள்ள உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்து தருதல் வேண்டும், இருக்கைகள் கணினி தொடர்பான சாதனங்கள் இவர்களுக்கு பெற்று தருதல் வேண்டும், “இல்லம் தேடி கல்வி”, “எண்ணும் எழுத்தும்”, “முன் பருவ கல்வி தொடக்கம்” மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணி புரிகின்ற ஆசிரியர்களுக்கான பணியிட பயிற்சிகள் ஆகிய திட்டக் கூறுகள் தொடர்பாக செயல்பாடுகளில் உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை ஈடுபடுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்ந்த அலுவலக கோப்புகள் மாவட்ட கல்வி அலுவலரின் வழியாக முதன்மை கல்வி அலுவலரின் ஆணைக்கு அனுப்ப வேண்டும். இல்லம் தேடி கல்வி, என்னும் எழுத்தும், முன் பருவ கல்வி தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சிகள் ஆகிய திட்ட கூறுகள் தொடர்பாக பள்ளி கல்வி ஆணையர் மாநில திட்ட இயக்குனர் தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடத்திடும் ஆய்வு கூடங்களில் உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பணியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.