
- நத்தம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை இளைஞர் கைது.!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் 21.
இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, பெற்றோர் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.இவர் அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து சிறுமியின் பெற்றோர் தட்டிக் கேட்ட போது அவர்களுக்கு ரஞ்சித்குமார் மிரட்டல் விடுத்து உள்ளார்.இது குறித்து சிறுமியின் தாயார் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் விசாரணை மேற் கொண்ட காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ரஞ்சித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.