தினக்கூலி ரூ.438 ஆக உயர்வு & 20% தீபாவளி போனஸ் – முதல்வர் அதிரடி உத்தரவு..!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு தற்போது தினக்கூலியை உயர்த்தி மற்றும் தீபாவளி போனஸ் குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவு:

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி தனியார் தோட்ட தேயிலை தொழிலாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு தினக்கூலியை ரூபாய் 438 என்று திருத்தி அமைத்து உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், இதற்காக ஆண்டுக்கு ரூபாய் 7.78 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து TANTEA தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கிடவும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பணியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்கப்பட்டு அவற்றை அமல்படுத்துவதற்கான ஆணைகளை முன்னதாகவே அரசு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வராத நிலையில் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தினை நிலுவை தொகையுடன் உடனடியாக வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த அறிவிப்பு காரணமாக TANTEA க்கு கூடுதலாக 12.78 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும், அரசின் இந்த  அறிவிப்பு காரணமாக 212 பணியாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

சீமானுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் வாழ்த்து..!!

Read Next

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.5,000 அபராதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular