தினசரி உச்சந்தலையில் எண்ணெய் வைத்தால் என்ன நடக்கும்?.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாகி வருகின்றன.

இப்படியொரு நிலையில் பெண்கள் தங்களின் கூந்தலை எப்படி பராமரித்து கொள்வது? என தெரியாமல் கிடைக்கும் யாவற்றையும் முயற்சி செய்து பார்க்கிறார்கள்.

கடைகளிலிருந்து இரசாயனங்கள் கலக்கபட்ட  எண்ணெய்கள், சாம்போக்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் பெரியளவில் நிவாரணம் கிடைக்காது. வீட்டில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு மாத்திரமே தலைமுடிக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தலையில் வறட்சி அதிகமாக இருக்கும் பொழுது தலைமுடி உதிர்வு, வெடிப்பு மற்றும் தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகள் வரக்கூடும்.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் வரக்கூடாது என நினைப்பவர்கள் தினமும் உங்கள் உச்சந்தலைக்கு கொஞ்சமாக  எண்ணெய் வைக்கலாம். இதனால் தலை முதல் கால் வரை ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.

அந்த வகையில், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதால் அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்க போகின்றன என்பது குறித்து பதிவில் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்:

1. தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதால் தலைமுடி பிரச்சினையுடன் சேர்த்து நம்முடைய மன அழுத்தமும் குறைவதாக கூறப்படுகின்றது.

2. தலைக்கு எண்ணெய் வைக்காத காரணத்தினால் தலையில் ஒரு சொறி ஏற்படும். இதனை நம்முடைய நகங்களை பயன்படுத்தி சொறிந்தால் புண் மற்றும் அலற்சிகளை ஏற்படுத்தும். தினசரி எண்ணெய் வைத்தால் இப்படியான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

3. தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை கருப்பாகவே வைத்து கொள்ளும். நிறத்தில் மாற்றத்தை கொண்டு வராது.

4. சிலர் பொடுகு பிரச்சினையால் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுப்பார்கள். வெளியில் மருந்து தேடி அழைவார்கள். இந்த பிரச்சினையுள்ளவர்கள் தினசரி கொஞ்சமாக தலைக்கு எண்ணெய் வைத்து வந்தாலே போதும். தீர்வு கண்டிப்பாக கிடைக்கும்.

5. தலைமுடி உதிர்வு, தலைமுடி அடர்த்தியின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் அவஸ்தைப்படுபவர்கள் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து வரலாம். 3 மாதங்களில் நீங்களே சிறந்த மாற்றத்தை பெறலாம்.

6. தலைமுடி உதிர்வு சாதாரணமாக இருக்கும் பொழுது எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது. அதே சமயம் அதிகமாகும் பொழுது தலை சொட்டையாக கூட வாய்ப்பு இருக்கின்றது. தலைமுடிக்கு சரியான மருந்தை கொடுப்பது தேங்காய் எண்ணெய் மாத்திரமே, அதனை தினசரி தலைக்கு வைப்பது சிறந்தது.

Read Previous

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!! பெரும் பரபரப்பு..!!

Read Next

வைரலாகும் நடிகை அனு இமானுவேல்-ன் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular