
ஊறுகாயில் அதிக அளவு உப்பு இருப்பதால் உடலில் சோடியம் அளவு அதிகரித்து ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படலாம். சோடியம் அதிகமாகும் பொழுது எலும்பு மூட்டுகள் வலுவிழக்கும். சிறுநீரகத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டு சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக அளவு எண்ணெய் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும். டிரான்ஸ் ஃபேட் காரணமாக இதய நோய்கள் வரும். அதிக மசாலா காரணமாக வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம்.