தினமும் ஏலக்காய் நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்..!!

நாம் உபயோகிக்கும் சமையல் பொருட்களில் அதிக வாசனை நிறைந்த பொருள் ஏலக்காய் இவை இனிப்பு பண்டங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது, இதனால் வரை சமையலில் வாசனைக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த ஏலக்காய் ஒரு மூலிகை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?

இந்த ஏலக்காய் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பொருளாய் உள்ளது. இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள், விட்டமின்கள் மற்றும் கனிமசத்துகள் உள்ளது. இந்த ஏலக்காயை காலையில் நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வருவதால் பலவிதமான நன்மைகள் உடலுக்கு ஏற்படும் .

  1. அஜீரணக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் தினமும் ஒரு கிளாஸ் ஏலக்காய் நீர் அருந்தி வந்தால் விரைவில் நல்ல பலன் ஏற்படும்.
  2. மலச்சிக்கல் ,வயிறு உப்புசம், வாயு தொல்லை இந்த ஏலக்காய் நீர் சிறந்த தீர்வாக அமையும்.
  3. உடலில் தேங்கியுள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
  4. நம்மில் பெரும்பாலானோர் வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகிறோம் இந்த பாதிப்பை சரிசெய்ய ஏலக்காய் நல்ல தீர்வாகும்.
  5. தோல் தொடர்பான பாதிப்பு சரிசெய்ய தினமும் ஏலக்காய் நீர் வருவது மிகவும் நன்று.
  6. ஏலக்காய் நீர் உடலுக்கு தேவையான மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி செய்கிறது.
  7. ரத்த அழுத்தம், ரத்த சோகை ஆகிய இரத்தம் தொடர்பான பாதிப்புகள் குணமாக ஏலக்காய் நீர் அருந்தலாம். ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளை சரிசெய்ய ஏலக்காய் நீர் அருந்தி வரலாம்.

Read Previous

வீட்டில் இருந்தபடியே சிறுநீரக கல்லை வெளியேற்றலாம்..!! தினமும் அரைக்கப் இதை குடித்தாலே போதும்..!!

Read Next

தீராத மூட்டுவலியை சரி செய்யும் முடக்கத்தான் கீரை எண்ணெய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular