தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா.!!

பொட்டுக்கடலையில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இதனை அடிக்கடி உண்ண வேண்டும். மேலும் பெண்கள் உடல்நலம் சரியில்லாதவர்கள் உடல் எடையை குறைக்க விரும்புவார்கள் போன்ற பலரும் பொட்டுக்கடலை மிகவும் ஊட்டச்சத்தான உறவு பொருளாக இருந்து வருகிறது. பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

  1. பொட்டுக்கடலையில் புரதம் மற்றும் நார்சத்து அதிக அளவில் இருப்பதால் உடலில் கலோரிகளை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  2. பொட்டுக்கடலையில் 18 . 64 கிராம் புரோட்டின் மற்றும் 16.8 கிராம் நார்ச்சத்து இருப்பதால் இதை உட்கொள்ளும்போது உடலில் உள்ள கொழுப்புகள் எளிதாக வெளியேறிவிடுகிறது.
  3. வருத்த பொட்டுகடலையில்  பாஸ்பரஸ் காப்பர் போன்ற சத்துக்கள் இருப்பதால் இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. வருத்த பொட்டுக்கடலை சாப்பிடும் போது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
  4. நீரழிவு நோயாளிகள் தொடர்ந்து பொட்டுக்கடலை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை உண்டாகும்.
  5. பொட்டுக்கடலை பசியை கட்டுப்படுத்துவதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
  6. கர்ப்பிணி பெண் பொட்டுக்கடலையை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் இரும்புச்சத்து போன்றவை அதிகரிக்கும் .
  7. செரிமான மண்டலத்தை சீர்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  8. பொட்டுக்கடலையில் உள்ள வைட்டமின் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகள் தசைகள் நரம்புகள் போன்றவை வலுப்பெற முக்கிய பங்கு வைக்கிறது.
  9. மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலி அதிக உதிரப்போக்கு இருப்பவர்கள் பொட்டுக்கடலையை தினமும் காலையில் உன் சாப்பிட்டு வர நல்லதொரு பலன் கிடைக்கும்.

Read Previous

காதல் தோல்வி – இளைஞர் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

சப்பாத்தி, பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!! சுவை வேற லெவலில் இருக்கும்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular