தினமும் ஒரு டம்ளர் இதை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்.!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் அனைவரும் பெரும்பான்மையாய் நினைப்பது நாம் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் உண்ணும் ஊட்டச்சத்து உணவுகளும், வாழ்க்கை முறையும், அன்றாட உடற்பயிற்சி செய்வதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அதிலும் நம் உடலில் சீராக இயங்குவதற்கு தேவையான ரத்தம் சுத்தமாக கிருமிகளின்றி இருப்பது மிகவும் முக்கியம். இவ்வாறு இரத்தத்தை சுத்தம் செய்வதற்கு ஒரு சில  ஆரோக்கியமான பானங்களை குடித்து வந்தாலே போதுமானது. இதை குறித்து முழுவதுமா இப்பதிவில் காண்போம்.

1.பூண்டு

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இடித்த பூண்டுகளைப் போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் .அதனை தினமும் காலை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் கிருமிகள் தானாகவே வெளியேறிவிடும்.

2.கேரட் மட்டும் பீட்ரூட்

கேரட் ,பீட்ரூட்டை சம அளவு எடுத்து ஜூஸாக அரைத்து அதனை தினமும் குடித்து வருவதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.

3.முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையை சாகவோ அல்லது சூப்பாகவோ செய்து குடித்து வருவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

4.பெரிய நெல்லிக்காய்

பெரிய நெல்லிக்காய் சாறை எடுத்து தினமும் காலையில் குடித்து வருவதால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் பலப்படும்.

5.நாவல் பழம் மற்றும் ஆப்பிள்

ஒரு கப் அளவிற்கு கொட்டை நீக்கிய நாவல் பழங்கள் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றை சேர்த்து ஜூஸாக செய்து குடித்து வருவதால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

Read Previous

உங்கள் பாத்ரூம் டைல்ஸ்சில் கரை படிந்துள்ளதா..? எளிதாக நீக்குவது எப்படி முழு விவரம் உள்ளே..!!

Read Next

இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? தலையில் வழுக்கை விழாமல் உங்கள் முடியை காப்பாற்ற இத ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular