
தினமும் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
சப்பாத்தி என்றால் நம் அனைவருக்கும் உடனே ஞாபகத்தில் வருவது சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறைக்கலாம். சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் பல நன்மைகள் உள்ளன. இந்நிலையில் தினமும் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்பாத்தி என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வீடுகளிலும் இரவு உணவாக இருக்கிறது. அது மட்டும் இன்றி மருத்துவர்களும் கூட சப்பாத்திக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் சப்பாத்தியில் அதாவது கோதுமை மாவில் அதிகமான அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. சப்பாத்தி சாப்பிடுவதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. சப்பாத்தியில் உள்ள சிங் மற்றும் இதர மினரல் சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பை அளிக்கும். உடல் ஆரோக்கியம் பெரும்போது தானே சருமமும் ஆரோக்கியமும் பெறும். கோதுமையில் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளதால் சப்பாத்தி சாப்பிடும் போது அது ஒரு நாள் முழுவதும் தேவையான ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பையும் மூளையின் செயல் திறனையும் அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சப்பாத்தி தான் சிறந்த டயட் உணவு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி இது மற்ற உணவுகளோடு ஒப்பிடும்போது கலோரி மிக மிகக் குறைவு. இதனால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும்.