
இந்த நவீன உலகத்தில் பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டு தான் இருக்கின்றனர். சிலர் மது அருந்துவதற்கு அடிமையாகின்றனர். சிலர் புகைபிடித்தலுக்கு அடிமையாகின்றனர். ஒரு சிலர் டீ அல்லது காபி குடித்தலுக்கு அடிமையாக இருக்கின்றனர்.
வேலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சிலர் தலைவலி காரணமாகவும், உடல் சோம்பல் காரனமாகவும் , ஒரு சில டீ குடித்தால் புத்துணர்ச்சி ஏற்படும் வேலை சுறுசுறுப்பாக செய்ய முடியும் என்று நம்பியும் டீக்கு அடிமையாகி வருகின்றனர்.
குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் டீ குடிப்பதை வழக்கமாக ஒரு பழக்கமாக வைத்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வருகையில் அவர்களுக்கு டீ குடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்து டீ குடித்தால்தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர். மேலும் டீ குடிப்பதால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
அதிக அளவில் டீ அருந்துவதால் அந்த டீ யிலிருந்து வரும் நச்சுக்கள் அதிக அளவில் வருவதால் கவன சிதறல் உறக்கம் கெடுதல் அமைதி இல்லாமல் போவது போன்ற பல இன்னல்களுக்கு நாம் ஆளாவோம். மேலும் தீயில் உள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள் உடலில் இரும்பு சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது. இதனால் நாம் பல உடல் சிரமத்திற்கு ஆளாவோம். குறிப்பாக புற்றுநோய் உள்ளவர்கள் அதிகமாக டி அருந்தக்கூடாது. ஏனெனில், புற்று நோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் ஹீமோதெரபி நாம் கொடுக்கும் போது அதிக அளவில் நாம் டீ குடிப்பதால் அது பலன் தராது. மேலும், ஒரு நாளைக்கு நாம் இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.