தினமும் நடைப்பயிற்சி செய்யும் நபரா நீங்கள்..!! இந்த தவறுகளை மறந்தும் கூட செய்யாதீங்க..?

தற்பொழுது உள்ள நவீன காலகட்டத்திலும் மாறிவரும் பழக்கவழக்கங்களாலும் நாம் வாழ்க்கை முறையில் பலரும் பலவிதமான நோய்களை சந்தித்து வருகின்றோம்/ இந்த வாழ்க்கை முறையில் இருந்து நாம் உடலை நோய் நொடிகள் இன்றி பாதுகாக்க உடற்பயிற்சி செய்வது என்பதை மிகவும் முக்கியமானது.

தற்பொழுது உள்ள அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது பலருக்கும் ஒரு கடிதம் ஆன விஷயமாய் அமைந்துள்ளது. எனவே தினமும் காலையில் நடை பயிற்சி செய்வது பலருக்கும் வழக்கமாய் கொண்டுள்ளனர். இவ்வாறு நடை பயிற்சி செய்யும் பொழுது கண்டிப்பாக ஒரு சில விஷயங்களை செய்யவே கூடாது அது குறித்து இப்பதிவில் தெளிவாய் காண்போம்.

இதய ஆரோக்கியத்திற்கும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கும் தினமும் பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சில காலணிகள் தசைவலி மற்றும் மூட்டு வலியை ஏற்படுத்த கூடும் என்பதால் நம் கால்கள் இருக்கு சரியான காலணிகளை அல்லது ஷுகளை அணிவது மிகவும் அவசியம். நடை பயிற்சி  செய்யும்போது கால்களை அடி எடுத்து வைப்பது நம் தோள்களில் தோரணை, முதுகை நேராக வைப்பது போன்றவை மிக முக்கியம்.

நடைபயிற்சி என்றால் காலையில் அல்லது மாலையில் எழுந்து நடப்பது மட்டுமல்ல மேலே குறிப்பிட்ட விஷயங்களை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் .நடக்கும்போது கைகளை இறுக்கமாகவோ அல்லது பக்கவாட்டிலோ வைத்திருக்கக் கூடாது. இது நம் உடலின் வேகத்தை சீர்குலைத்து உடம்பின் சமநிலையை குறைத்து விடும். எனவே ஒரு சில செயல்முறைகளை தவிர்பதன்  மூலம் நடை பயிற்சியின் முழு பயனினை அடையலாம்.

Read Previous

“கால் ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது” முன்னோர்கள் கூறியதன் காரணம் என்ன தெரியுமா..?

Read Next

முதுகு வலி மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த ராகி பாலை குடித்து பாருங்கள்..!! அனைத்து வலியும் ஓடிவிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular