
இந்தியாவில் மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வட்டியும் அதிகம். ஏராளமான சிறு சேமிப்பு திட்டங்களை வங்கிகள், போஸ்ட் ஆபிஸ்கள் வழங்கி வருகின்றன. பொதுமக்கள் பணத்தை சேமிப்பதற்கு தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். போஸ்ட் ஆபிஸ்கள் மூத்த குடிமக்கள், சிறியவர்கள், குழந்தைகள் என ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன்.
அதன்படி ரெக்கரிங் டெபாசிட் திட்டம் முக்கியமான சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலமாக 10 ஆண்டுகளில் 8.5 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெற முடியும். இதில் முதலீடு செய்வதற்கான வட்டி விகிதம் கடந்த 2023 ஆம் ஆண்டு 6.5% ஆக இருந்தது. தற்போது அது 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு போஸ்ட் ஆஃபீஸில் வைப்பு நிதி கணக்கை தொடங்க வேண்டும்.
இதில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம், அதிகபட்ச உச்சவரம்பு என எதுவும் கிடையாது. இதில் 18 வயது நிறைவடையாதவர்கள் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். அப்போது பெற்றோரின் பெயரையும் ஆவணத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்வதன் மூலமாக மொத்த முதலீட்டு தொகை 60 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதற்கு தினந்தோறும் நீங்கள் வெறும் 165 ரூபாய் சேமித்தால் போதும். ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்தில் மொத்த முதலீடாக மூன்று லட்சம் ரூபாய் இருக்கும்.
இதற்கு 6.7 சதவீதம் வட்டி கணக்கில் 56 ஆயிரத்து 830 ரூபாய் கிடைக்கும். இதனால் ஐந்து ஆண்டுகளில் முதல் இரவு தொகை மொத்தம் 3,56,830 ரூபாயாக முதலீட்டாளர்கள் பெற முடியும். இதனை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து பத்து ஆண்டுகள் டெபாசிட் செய்தால் மொத்த தொகையாக 6 லட்சம் ரூபாய் இருக்கும். வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையாக மொத்தம் 8,54,272 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்பினால் உடனே இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறுங்கள்..