தினமும் ரூ.137 சேமித்தால் போதும், ரூ.13 லட்சம் ஈஸியா பெறலாம்..!! அது எப்படினு தெரியனுமா?..

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரின் எண்ணத்திலும் ஓடிக்கொண்டிருப்பது எதிர்காலத்தில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் ஏற்படாத வகையில், ஒரு நல்ல பாதுகாப்பான திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பது தான். அவர்களின் எண்ணத்தில் ஓடுவதை நிஜமாக்கவே SBI-ன் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்ற திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ. 50,000 முதலீடு செய்தால் போதும், உங்களுக்கு ரூ.13 லட்சம் வருமானம் கிடைக்கும். அது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? வாருங்கள் இந்த பதிவை பாருங்கள்.

அதாவது, SBI-ன் PPF திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இணையலாம். இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு 7.1% வட்டி வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 500-ல் இருந்து தொடங்கலாம். மேலும்,வருடாந்திர முதலீட்டின் அதிகபட்ச வரம்பு ரூ.1.5 லட்சம் ஆகும். மேலும், இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், உங்களுக்கு தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி, 15 ஆண்டு கால முதலீட்டில் நீங்கள் கடன் பெறும் வசதியும் இதில் உண்டு.

உதாரணமாக, இப்போது நீங்கள் PPF திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.50,000 என்ற கணக்கில் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள் என்றால், உங்கள் கணக்கில் ரூ. 7,50,000 இருக்கும். மேலும், 7.1% வட்டி தொகையை சேர்த்து மொத்த முதிர்வு தொகையாக ரூ. 13,56,070 உங்களுக்கு கிடைக்கும். இதே நீங்கள், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் , 15 ஆண்டுகள் கழித்து ரூ.40.68 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். எனவே, ஒரு குறிப்பிட்ட தொகையை தினமும் சேமித்து வைத்து, இந்த PPF திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுங்கள்.

Read Previous

தமிழக அரசில் வேலைவாய்ப்பு..!! 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Read Next

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/-ஊதியத்தில் வேலை..!! தேர்வு கிடையாது..!! நேர்காணல் மட்டுமே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular