தினமும் ரூ.87 முதலீடு செய்தால் ரூ.11லட்சம் லாபம் – LIC ன் அட்டகாசமான பாலிசி திட்டம்..!!

தினமும் ரூ.87 முதலீடு செய்தால் பாலிசி திட்ட முடிவில் ரூ.11 லட்சம் பெரும்படியான பாலிசி திட்டம் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LIC திட்டம்:

நாட்டின் முன்னணி அரசு காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி ஏகப்பட்ட பாலிசிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 8 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக எல்ஐசி ஆதார் ஷீலா என்கிற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாலிசிதாரர்கள் குறைவான முதலீட்டிலேயே சேமிப்பை துவங்கலாம். இந்த எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் தினமும் குறைந்தபட்சமாக ரூ 87 வீதம் 10 ஆண்டுகளுக்கு சேமித்து வந்தால் மொத்த சேமிப்பு ரூ. 3,17,550 ஆக இருக்கும். ஆனால், பாலிசிதாரர் 70 வயதை எட்டியதும் ரூ.11 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இதே போல, பாலிசிதாரர் 20 ஆண்டுகளுக்கும் சேமிக்கலாம். அதே போல, பாலிசி திட்டம் முடிவடைவதற்கு முன்பாகவே பாலிசிதாரர் இறந்துவிட்டால் பாலிசிதாரரின் நாமினிக்கு மொத்த தொகையும் வழங்கப்படும். எனவே, எதிர்கால மருத்துவ செலவிற்காக சேமிக்க விரும்புவோர் தற்போதே எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் இணைந்து பயன்பெறவும்.

Read Previous

ஏன் நெற்றியில் விபூதி பூசுகிறார்கள் தெரியுமா?.. ஆன்மிக விளக்கத்துடன் கூடிய விளக்கம்..!!

Read Next

மைதானத்தில் வாண வேடிக்கை ரத்து – பிசிசிஐ அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular