இன்றைய காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தினம் தோறும் நெய்யை உணவில் சேர்த்து கொள்கின்றனர், இதனால் உடலுக்கு ஆரோக்கியம் இருக்கிறதா இல்லையா என்று வாருங்கள் தெரிந்து கொள்வோம்..
சுத்தமான பசும்பாலில் தயாரிக்கப்பட்ட நெய் உணவில் சுவையை அதிகமாகி மணத்தை தருகிறது, மேலும் அதிக நெய் சாப்பிடுவதனால் கொலஸ்ட்ரால் மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது என்று பலரும் கூறுகின்றனர், நெய் சாப்பிடுவது ஆரோக்கியமா இல்லை ஆபத்தா என்று தெரிந்து கொள்வோம், மேலும் பசுவின் பாலில் இருந்து சுத்தமாக தயாரிக்கப்படும் நெய். உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது என்றும் அதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது, மேலும் காலை நேரங்களில் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்கு குளிர்ச்சியும் உடலில் உள்ள வறட்சியையும் நீக்கி சூடு தணிக்கிறது, பசுவின் நெய் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற பெரும் பங்கு வகிக்கிறது, ரத்தத்தை சுத்தப்படுத்தி, தசைகளை ஆரோக்கியமாய் இயக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது, மேலும் இதய நோய் கல்லீரல் மண்ணீரல் போன்ற உறுப்புகளில் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது இதனால் நெய் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் தான்..!!