• September 12, 2024

தினமும் 10 நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?..

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.  நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் மூலாதாரத்தில் – சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

தோப்புக்கரணம் போடும்போது மூளையின் நியூரான் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி அடையும். அதனால், மனம் ஒருமுகப்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கும்.

உடல், புத்துணர்ச்சி பெறும். மன அழுத்தம், மனச் சோர்வு விலகும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளை நரம்புகள் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்கள் நரம்பியல் வல்லுநர்கள்.

மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமாகத் தூண்டப்படுகிறது. மேலும், மூளைக்குச் செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் நரம்புகள் வலுப்பெறுகின்றன.

Read Previous

செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதா?..

Read Next

என்னென்ன அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular