
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் அதை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்றால் கட்டாயமாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் காலப்போக்கில் சத்தான உணவு முறைகளை பலரும் மறந்து வரும் நிலையில் பொட்டுக்கடலையில் உள்ள பயன்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
பொட்டுக்கடலையில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நம் உடலை விட்டு ஓட வைக்கும். மேலும் இது இதய நோய் அபாயத்திலிருந்து பாதுகாக்க மிகவும் உதவுகிறது. பொட்டுக்கடலை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் செரிமான மண்டலத்தை சீராக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக உடல் எடையை குறைப்பவர்கள் இந்த பொட்டுக்கடலையை எடுத்துக் கொள்ளலாம். மற்றும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் புற்றுநோய் வராமல் இது தடுக்கும். இதுபோன்ற எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் இந்த பொட்டுக்கடலையில் நிறைந்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் ஒரு 2 ஸ்பூன் பொட்டுக்கடலையாவது சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.