அன்றாட வாழ்க்கையில் பலரும் உடற்பயிற்சி செய்ய விரும்புவதில்லை. சிலர் நடைப்பயிற்சி செய்யக்கூட விரும்புவதில்லை. சோம்பேறித்தனமாக தூங்குகின்றனர். இதனால் அவர்களின் எடை தான் அதிகரிக்கும். மேலும் மன அழுத்தமும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு. தினமும் அன்றாட வாழ்க்கையில் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது மனம் மற்றும் உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் தினமும் இவ்வாறு நடை பயிற்சி செய்வதால் உடலில் உள்ள கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. மேலும் முதுகு நரம்புகள் உறுதியாகி நரம்பு மண்டலமும் சுறுசுறுப்படையும். நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரலில் உள்ள ஆக்சிஜனின் அளவு பல மடங்கு அதிகரித்து இரவில் நல்ல தூக்கம் வரும் இதனால் உடலில் உள்ள கெட்ட வியர்வை வெளியேறி செரிமான பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து நம்மால் விடுபட முடியும். மேலும் தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நமது மனம் உற்சாகம் அடைவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள எலும்புகள் மற்றும் மூட்டுகள் தசைகள் ஆகியவற்றிற்கு ஆற்றல் கிடைத்து அவை உறுதியாகின்றது. மேலும், தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி நம் இதயத்தை வலிமையாக்கி கண் பார்வையும் தெளிவுப்படுத்துகிறது என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக மன அழுத்தம் குறைகிறது என்றும் கூறுகின்றனர். மேலும், எவ்வளவு வயதானாலும் இளமையான தோற்றத்தை வைக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும் அந்த ஆசை இருந்தால் மட்டும் போதாது தினமும் நாம் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.




