
நம் முன்னோர்கள் நமக்கு பலவிதமான அறிவியல் ரீதியான விஷயங்களை தினசரி வாழ்க்கையோடு ஒப்பிட்டு சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் கூறிய ஒவ்வொரு செயலுக்கு பின்பும் ஒரு அறிவியல் ரீதியான மருத்துவம் ஒளிந்துள்ளது. நம் தாத்தா பாட்டி காலத்தில் எல்லாம் கண்டிப்பாக தினமும் தோப்புக்கரணம் போட வேண்டும் என்ற பழக்கத்தை சொல்லி எந்தவித தப்பு செய்தாலும் அதற்கு தண்டனையாக தோப்புக்கரணம் தான் போட சொல்வார்கள். அது தண்டனை அல்ல அதில் இருக்கும் நன்மை ஏராளம் என்பது நமக்கு இப்போதுதான் தெரிகிறது. இந்நிலையில் தினமும் 5 நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தோப்புக்கரணம் போடும்போது நமது மூளையில் பல பயனுள்ள மாற்றங்கள் நிகழும். நமது மூளை புத்துணர்ச்சியாகவும் செயல்படும். ஆட்டிசம் போன்ற மன இறுக்கம் சம்பந்தமான நோய்களும் தோப்புக்கரணம் போடுவதால் குணமடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தோப்புக்கரணம் போடுவதால் இரத்தம் ஓட்டம் சீராக நடைபெறும். சோர்வு என்பது அந்த நாளில் தோப்புக்கரணம் போடுவதன் மூலம் தவிர்க்கலாம். புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் நம்மை நாமே உணர்வோம். இதனால் தினமும் காலை எழுந்ததும் ஐந்து நிமிடமாவது தோப்புக்கரணம் போட்டுவிட்டு தினசரி வேலைகளை தொடங்குங்கள்.