
திமிராய் இருக்கிற பெண்களை எனக்கு பிடிக்கும் ஏனென்றால் அவர்கள் தான் ஆண்களை விட பலமானவர்கள்.
அவர்களின் கோபத்திற்குள் தான் நளினம் ஒளிந்திருக்கும் ஆதலால் ரசனையில் வெறுப்பு ஏற்படாது.
தனக்கு ஏற்றதான ஆடைகளை அணிவார்கள்.
தவறாக பார்க்கும் கண்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஏனோ தானோ வென்று வாழ்ந்து விட்டு போவதற்கு அவர்களுக்குப் பிடிக்காது. என்ன தேவையோ அதை தாங்களே தெரிவு செய்வார்கள்.
அவர்கள் தாங்கள் வாழ்வதற்கான ஒரு வரைபடத்தை உருவாக்கி அதன் வழியே பயணிக்கவும் முயற்சிப்பார்கள்.
தனக்கு என்ன பிடிக்கிறதோ அதில் பிடிவாதமாக இருப்பார்கள். பிடிக்கவில்லை என்றால் அதை முகத்துக்கு நேராகவும் சொல்லுவார்கள்.
அவர்களிடம் ஒரு புன்னகையை கொடுத்து இலகுவாக இதயத்தை வாங்கிவிட முடியாது.
அவர்களின் எண்ணத்தில் பெரும் தூர நோக்கும் இருக்கும். எந்த சிற்றின்பத்திற்காகவும் எதையும் இழந்து விட மாட்டார்கள்.
அவர்களை ஏமாற்ற முடியாது. தங்களுக்கான ஒரு நியாய கருத்தை உருவாக்கி அதில் முடிவாக இருப்பார்கள்.
பிழையான கருத்துக்களை அவர்களிடத்தில் திணிக்க முடியாது. தவறாக நினைப்பவர்களை அவர்கள் கண்களே தூர துரத்தி விடும்.
திமிராய் இருக்கிற பெண்களை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை – ஆனால் இந்தக் கேடு கெட்ட சமுதாயத்தில் இருந்து தப்பிக் கொள்வதற்காக தன் பாதுகாப்புக்காகத்தான் அவள் அவ்வாறு மாறிக் கொண்டாள் என்பதை யாரும் அறிவதில்லை..