தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. பல கட்சிகள் தங்களது கூட்டணிகளை முடிவு செய்தும் அதை அறிவித்தும் வருகின்றது. இதைப் பற்றி அறிவிக்காத கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்று நம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் தலைவரான திருமாவளவன் அவர்கள் திமுகவை நம்பி விசிக இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் கூறும் வகையாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூட்டணியில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்.
மேலும் திருமாவளவன் அவர்கள் தமிழக அரசில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப கூறியும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான திமுகவின் வாக்குறுதிகளை தேர்தல் நெருங்குவதற்கு முன் நிறைவேற்றவும் வலியுறுத்தி வருகிறார். இதனால் திமுகவை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகுமா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.




