பழிவாங்கும் அரசியலை செய்யும் திமுகவின் செயல் கண்டிக்கத்தக்கது என்று வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
கோவையில் நேற்று செய்தியார்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறியிருப்பது “தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை, போதை பொருட்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இதனை தடுக்க திறன் இல்லாத அரசாக திமுக அரசு இயங்குகிறது. இந்த விவகாரங்களை பேசி குறிப்பிட்டு பேசி அரசை விமர்சிக்கும் நபர்களை பழிவாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
பெண்களை இழிவுபடுத்தும் நபர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு அரசு உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் பாதி திமுகவினர் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். திமுகவின் இவ்வாறான பழி வாங்கும் அரசியல் என்பது விரைவில் முற்றுப்புள்ளியை சந்திக்கும்”, என்று பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.