திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது..!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!!

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

தமிழக பாஜக சார்பில் இன்று சென்னை மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பொது கூட்டம் நடைபெற்ற முடிந்தது. இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள், அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை “பாஜக பற்றி பேசுவதற்கு அரசியல் அனுபவம் இல்லாதவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமரை திட்டுவதை மட்டுமே வேலையாக கொண்டுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ்நாட்டில் இம்முறையும் பாஜக வெல்லும். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது”, என கூறி உள்ளார்.

Read Previous

முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்..!! காரணம் இதுவா..?

Read Next

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா “இந்துத்துவா தலைவர்”..!! தமிழிசை சௌந்தர்ராஜன் பரபரப்பு பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular