
நமக்கு இருக்கும் கவலைகள் மற்றும் குழப்பங்களை ஓரம் வைத்து ஒரு மூன்று மணி நேரம் அமைதியாக குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சி நிறைந்து வரும் இடம் தான் திரையரங்கம். இந்த திரையரங்கங்களில் தான் நாம் அனைத்தையும் மறந்து ஆனந்தமாக இருப்போம். குடும்பங்களை அவ்வப்போது கூட்டிச்சென்று மகிழ்விப்போம். ஆனால் இப்படிப்பட்ட இடத்தில் மது விற்பனை நடந்தால் அது எப்படி இருக்கும்.
உலகத்தில் எந்தத் திரையரங்கம் மது அருந்திவிட்டு உள்ளே வர அனுமதிக்காது. அதற்கான காரணம் அங்கிருக்கும் குழந்தைகளையோ பெண்களையோ அவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக. ஆனால் இப்பொழுது PVR-INOX திரையரங்கிற்குள் மதுவிற்கு உரிமம் கேட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
திரையரங்கிற்கு வரும் யாரும் வெளியே இருந்து மது வாங்கிக் கொண்டு வரக்கூடாது என்றும் இவர்களே தான் விப்பார்கள் என்றும் கேட்டுள்ளனர். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி மட்டும் நடந்தால் திரையரங்கிற்குள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அபாயம் நிச்சயம் ஏற்படும்.