திருச்சியில் பரிதாபம்..!! இறந்து போனவர்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி இல்லாமல் வயல் வழியே இறுதி ஊர்வலம் நடத்திய மக்கள்..!!

பாதுகாப்பு அளிக்கும்  காவலர்களுடன் நெல் வயலில் வழியாக இறந்தவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் இறுதி ஊர்வலம் நடந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவர் மலையில் சுடுகாட்டுக்கு செல்வதற்கு சரியான பாதை இல்லை என கூறப்படுகிறது. சுடுகாட்டிற்கு பிரத்தியோக சாலை இல்லாத காரணத்தால் தற்பொழுது உள்ள பாதை நெல் வயல்களின் வழியாக தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ளது. அவர்கள் அந்த வயலின் வழியாக நுழைவதை தடை செய்கின்றார்கள். எனவே இறந்தவர்களின் உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தகனம் செய்ய காவல்துறையினரின் பாதுகாப்பை நாட வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சியில் உள்ள கிராம மக்கள் ஊராட்சி, மாவட்டம், மாநிலம் என அனைத்து நிலை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு பயனும் இல்லை என கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணாவிட்டால் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாகவும் மக்கள் கூறி உள்ளனர், தேவையான பணிகளை மேற்கொள்ள தரைமட்ட அலுவலர்களுக்கு உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களிடம் உறுதியளித்துள்ளோம் என தாலுகா வருவாய் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

தமிழகத்தில் பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு இனிப்பான செய்தி..!! தமிழக அரசு உத்தரவு..!!

Read Next

நொடிப்பொழுதில் நிகழ்ந்த சோகம்..!! சரக்கு ரயிலில் விளையாடி கொண்டு இருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular