திருச்சியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர்..!!

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நடந்த பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் ஆங்கரை மலைய புரத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவரை வெட்டி படுகொலை செய்தனர்.இந்த கொலை தொடர்பாக லால்குடி கோவிந்தாபுரத்தை சேர்ந்த ராஜா என்கிற கலைப்புலி ராஜா வை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் சிறுகனூர் அருகே உள்ள வனப்பகுதியில் ராஜா என்கிற கலைப்புலி ராஜா மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அங்கு சென்று ரவுடி ராஜாவை பிடிக்க முயன்ற போது போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றார். அப்போது தனிப்படை போலீசார் துப்பாக்கியால் ரவுடி ராஜாவின் வலது காலில் சுட்டனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரவுடியை மீட்ட போலீசார் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் மேலும் போலீசாரின் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த ஆண்டு பிரபல ரவுடி கொம்பன் சுட்டுக் கொல்லப்பட்ட அதே வனப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

அரசு பேருந்து மீது மோதிய கண்டெயினர் லாரி..!! 3 பேர் காயம்..!!

Read Next

குட்டியான டவுசரில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular