
திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் சின்ன இலுப்பூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் பள்ளியில் படித்து வந்த தங்கை ரோகிணி தனது லட்சியத்தை இலக்காக கொண்டு JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், சம்பவம் அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியையும் மலை கிராமத்தில் உள்ள பழங்குடியினர் கல்விக்கு முக்கியம் முக்கியத்துவம் தருவதை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து தங்கையை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் ஏழை எளிய மாணவிகளுக்கு இது ஒரு முன் உதாரணம் என்றும் கல்வியால் மட்டுமே எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்றும் கல்வி ஒரு சிறந்த ஆயுதம் என்று மலைவாழ் தங்கை ரோகிணி உணர்த்தியதை எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டும், அந்த தங்கைக்கு நினைவு பரிசு வழங்கியது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்துக்கு 7.42 லட்சம் மதிப்புள்ள tractor ஒன்றையும் வழங்கியுள்ளோம், மேலும் அவர் சகோதரருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வேலை வாய்ப்பு தொகுப்பூதியத்தில் வேலை வழங்க விண்ணப்பம் வைத்துள்ளோம் என்று தமிழக கழக இளைஞரணி கூறியுள்ளது.