தமிழ் சினிமாவில் 80’s, 90’s காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்த செந்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக வளம் வந்தவர் செந்தில். ஒரு கோவில் இரு தீபங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவரின் காமெடி அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.
அதை தொடர்ந்து கவுண்டமணியுடன் இணைந்து செந்தில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர்கள் காம்போவில் வெளியாகும் திரைப்படங்களுக்காகவே ரசிகர்கள் கூட்டம் திரையரங்குக்கு சென்றன. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இவர்களின் சிறந்த காமெடிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
அதிலும் கவுண்டமணி செந்திலை அடிக்கும் போதெல்லாம் சிறிது கூட ஈகோ பார்க்காமல் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் மற்ற காமெடி நடிகர்களின் வரவால் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கி இருந்த செந்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.
தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில் கூட இவரது மனைவி தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் நடிகர் செந்தில் குறித்தும் அவரது மகன்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
பொதுவாக செந்தில் சாமி பக்தி அதிகம் கொண்டவர். அடிக்கடி இவர் கோவில் செல்லும் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகும். அந்த வகையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.