இன்றைய சமூகத்தில் ஆணுக்கு நிகர் பெண் என்ற கருத்துக்கிணங்க ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகராக திருநங்கைகளும் இருக்க வேண்டும், அவர்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றும் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்தும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கி வரும் நிலையில் திருநங்கையின் சில கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலே இருக்கிறது…
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஏராளமானூர் கலந்து கொண்டு தங்களின் மனுக்களை முன்வைத்து தங்களுக்கு வேண்டிய கோரிக்கைகளை கேட்டும் நடத்தி தர வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களிடம் வேண்டுதல் இட்டனர் அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் மாவட்ட ஆட்சியிலும் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் எனவும் சுமார் 150 பேர் கலந்துகொண்டு மனு கொடுத்தனர், மேலும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் உங்களுக்கு தமிழக அரசு நில ஒதுக்கீடு வழங்கும் என்றும் கூறியுள்ளார்..!!