திருநெல்வேலி அல்வா பிரசித்தி பெற்று விளங்குவதற்கான காரணங்கள் என்ன..?? அதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது..??

Oplus_131072

 

இந்த உலகத்தில் பல வகையான அல்வா வகைகள் இருக்கும்போது ஏன் இந்த இருட்டு கடை அல்வாவுக்கு மட்டும் அப்படி ஒரு தனி சிறப்பு ? இதற்கான காரணம், இந்த அல்வாவுக்கு தேவையான கோதுமையை இவர்கள் கையால் தான் அரைக்கிறார்கள்.

அது மட்டும் அல்லாமல், இந்த அல்வாவை மிஷின்களை தவிர்த்து, மேனுவல் முறைப்படி தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் இந்த இருட்டு கடை அல்வாவிற்கு இவ்வளவு வரவேற்ப்பு.

***திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!***

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச்சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே திருநெல்வேலி என்றாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள்..

வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக தமிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது.

இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது என மற்றும் சிலர் சொல்கிறார்கள்..

எது எப்படியோ இன்று திருநெல்வேலி என்றாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அல்வா ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. இந்த ஊரு அல்வாவிற்கு இருக்கும் சுவையே தனிதான். திருநெல்வேலி முழுக்க அல்வாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலின் எதிரே இருக்கும் “***இருட்டுக்கடை***” அல்வாவிற்குத்தான் முதலிடம்.

**சந்திரவிலாஸ்** என்கிற கடையும் உண்டு..இங்கு கிடைக்கும் அல்வாவும் மிகத் தரமானதுதான்

இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகிலுள்ள”**சாந்தி ஸ்வீட்ஸ்**” கடையின் அல்வாவிற்கு இரண்டாமிடம் .

அடுத்த இடத்தில் “**லெட்சுமி விலாஸ்**” கடை அல்வா இருக்கிறது. இது தவிர பல லாலா கடைகள் சுவையான அல்வாவைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்த மூன்று கடைகளில் கிடைக்கும் சுவையை விட கூடுதலான சுவை அதே திருநெல்வேலியில் உள்ள அம்பாசமுத்திரத்தில் உள்ள பெரிய லாலா(சண்முகா விலாஸ்)கடையில் கிடைக்கும்.அதிலும் அங்கு கிடைக்கும் ஸ்பெஷல் அல்வா பிரமாதம்.பாபநாசம் செல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் இந்த அல்வாவின் சுவையை சுவைக்க மறக்காதீர்கள்.அம்பாசமுத்திரம் பூக்கடை ஸ்டாப் அருகில்..

இந்த இருட்டுக் கடையில் அல்வா மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு மணிக்குத் துவங்கி இரவு பத்து மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. 82ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக் கடை என்று அழைத்தனர்.

கடையைத் துவங்கிய இருவரது மரணத்திற்குப் பிறகு ஹரிசிங் என்பவர் இந்தக்கடையை நடத்தி வருகிறார். இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் (செண்டிமெண்ட்) அதாவது வெறும் 40 வாட்ஸ் மின் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி விட்டது.

சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச்செய்யப்படும் அல்வா மிகச் சுவையாக கிடைக்கிறது. ஆனால் பல போலியான அல்வாகடைகளில் தரமில்லாத கோதுமையில் அல்லது ஜவ்வரிசி மற்றும் பிற மாவுப்பொருட்களையும் கலந்து தயாரிக்கப் படுகின்றன. இது போன்ற கலப்புப்பொருள்களால் தயாரிக்கப்படும் அல்வா சுவையாக இருப்பதில்லை.

Read Previous

தாய் தந்தை வசிக்கும் இல்லம்..!! கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டிய ஒரு அற்புதமான பதிவு..!!

Read Next

தலைவலி மற்றும் தலைபாரம் குறைய வீட்டிலேயே இதை மட்டும் பண்ணுங்க போதும்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular