திருநெல்வேலி ஸ்பெஷல் இடி சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 150 கிராம்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 10
கத்தரிக்காய் – 1
முருங்கைக்காய் – 1
மஞ்சள் பூசணிக்காய் – சின்ன துண்டு
மாங்காய் – சின்ன துண்டு
கேரட் – 1
கேரட் – 1
வெள்ளரிக்காய் – சின்ன துண்டு
தக்காளி – 4
தேங்காய் துருவல் – 5 ஸ்பூன்
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
தேங்காய் எண்ணெய் – நாலு ஸ்பூன்
தாளிப்பதற்கு கடுகு, கருவேப்பிலை ,மல்லி இலை தாளிப்பதற்கு – சிறிதளவு
இடி சாம்பாருக்கு வறுக்க தேவையான பொருட்கள்கொத்தமல்லி -2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒன்றரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
வெந்தயம் – அரை ஸ்பூன்
செய்முறை
துவரம் பருப்பை கழுவி பூண்டு ,மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் நன்கு வறுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் பொடித்துக்கொள்ளவும்.தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளவும்.பின்பு கடாய் அடுப்பில் வைத்து சின்னவெங்காயம், காய்கறி ,தக்காளி புளி கரைத்த தண்ணீர் ,உப்பு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.அதனுடன் வேக வைத்த பருப்பு ,பொடித்து வைத்துள்ள இடி சாம்பார் பொடி தேவையான அளவுக்கு தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.நன்கு கொதி வந்தவுடன் அரைத்த தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.பின்பு கடாயில் தேங்காய் எண்ணெய் உற்றி கடுகு கருவேப்பிலை மல்லி இலை போட்டு தாளித்து சாம்பாரில் ஊற்றினால் கமகமன்னு மணக்கிற இடி சாம்பார் ரெடி.இடி சாம்பார் சாதம் ,இட்லி, தோசை எல்லாத்துக்குமே ரொம்ப சூப்பரா இருக்கும்.
இது திருநெல்வேலி ஸ்பெஷல் சாம்பார்.பொங்கலன்று அனைத்து காய்களையும் போட்டு செய்யக்கூடிய ஸ்பெஷல் சாம்பார்.




