
திருப்பதியில் ஏழுமலையானுக்கு மண் சட்டியில் படையல் வழங்கப்படும் ரகசியம் தெரியுமா..??
ஏழுமலையானின் பக்தரான பிறவியிலேயே கால் ஊனமான பீமய்யா என்ற குயவன் மண் வடிவில் பெருமாளை செய்து வழிபட்ட பக்தியை மெச்சி புரட்டாசி சனிக்கிழமை அன்று திருமால் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமை வெளிப்படும் நாளில் முத்தி எனக் அந்த ஊரை ஆண்ட மன்னன் தொண்டைமான் திருமால் மீது இருந்த அளற்ற பக்தியினால் ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்தார். ஒரு நாள் பூஜையில் மண் மலர்கள் விழுந்ததை கண்டு தனது வழிபாட்டில் பிழை இருக்குமோ என்று வருந்தினார். அன்று இரவு மன்னரின் கனவில் திருமால் தோன்றி பீமய்யாவின் பக்தியை பற்றி கூற ஆச்சரியமடைந்த தொண்டைமான் பீம் ஐயாவின் வழிபாட்டை கவனிக்க அவரை தேடிச் சென்றார். அப்போது பீம் ஐயா பக்தியால் மண்ணையே மலர்களால் கருதி அர்ச்சித்ததை பார்த்த மன்னன் உணர்ச்சியுடன் அவரை தழுவி உன் பக்தியால் திருமால் உன் வழிபாட்டை ஏற்றுக்கொண்டார் என கூறினார். அன்றைய தினம் பீம் ஐயாவின்பக்திக்கு பெருமாள் முத்தி அளித்து புரட்டாசி சனிக்கிழமை மகத்துவமிக்கதாக உயர்த்தினார். அவரது பக்தியை உலகறிய செய்ய பெருமாளின் ஆணைப்படி திருப்பதியில் இன்றும் மண் சட்டியில் நைவேத்தியம் வழங்கப்படுகிறது .