திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டும் தான், அப்படி இருக்கும் பட்சத்தில் இனி லட்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு அவசியமாக தேவைப்படுகிறது என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது..
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் பல நாடுகளிலிருந்தும் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையானை வணங்குவதற்கு பக்தர்கள் பலரும் ஓடி வருகின்றனர், பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் மீது எவ்வளவு பிரியமோ அதே பிரியும் திருப்பதி லட்டு மேலும் உண்டு, திருப்பதி லட்டு என்றால் ஒரு தனி சுவையும் அதனை சுவைக்கும் போது திகட்டுவதும் இல்லை மீண்டும் மீண்டும் சாப்பிடும் வேண்டும் என்ற எண்ணமே வரும், அப்படி இருக்கும் பட்சத்தில் இனி திருப்பதியில் லட்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது, இனி வரும் நாட்களில் திருப்பதியில் லட்டு வாங்குவதற்கு ஆதார் கார்டை காண்பித்தால் மட்டுமே வழங்கப்படும் என்றும் தரிசனத்திற்கு வருபவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும் அதற்கு மேல் லட்டு வாங்க நினைப்பவர்கள் ஆதார் கார்டை காண்பித்து லட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் லட்டின் விலை ரூபாய் 50 என்றும் அறிவித்துள்ளனர்..!!