உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனுதினமும் பக்தர்கள் கூட்டம் இருந்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் கூட்ட நெரிசலில் அவதியுறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான முன்பதிவு டிக்கெட் விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், கல்யாணோத்சவம், திருமலை ஆர்ஜித சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ரதிபாலங்கர சேவை ஆகிய முன்பதிவு டிக்கெட்டுகள், வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் மணி விநியோகம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை பெற https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




