மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நாளை (ஜன., 18) காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக 27ஆம் தேதி தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், நகரின் முக்கிய ரதவீதிகளில் தேரோட்டமும் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக 28ஆம் தேதி காலை 9.40 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தெப்பமிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் தெப்பக்குளத்தை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.




