
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்ற மின் தூக்கி திடீரென பழுதாகி நின்றது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு சேவைகளை பெற வரும் பொதுமக்கள் 3 மற்றும் 4வது தளம் வரை செல்ல வேண்டி இருப்பதன் காரணமாக மின் தூக்கி செயலிழந்திருப்பதால் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மின் தூக்கியை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது