திருப்பூர் அருகே சமுதாய கழிப்பிடம் திறப்பு விழா..!!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பேரூராட்சி, கிழக்கு நீலம்பூர் 17 வது வார்டில் தூய்மை இந்தியா திட்டம் 2021-2022 ன் கீழ் ரூ. 15, 00, 000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கழிப்பிடம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று திமுக திருப்பூர் தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் இரா. ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் கே. ஈஸ்வரசாமி, கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் எம். ஏ. சாகுல் அமீது, ஆகியோர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் N. ராமசாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் PS. தங்கராஜ், மடத்துக்குளம் பேரூர் கழக செயலாளர் N. பாலகிருஷ்ணன், மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி, துணைத்தலைவர் SR (எ) தி. ரங்கநாதன், மாவட்ட பிரதிநிதி M. ஜெயகுமார், ஒன்றிய கழக துணை செயலாளர் துரை. பாலமுரளி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கு. சாமிதுரை, தீபிகா முருகானந்தம், நதீரா கண்ணாடி பாபு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் K. ஐயப்பன், பேரூர் கழக அவைத்தலைவர் மாரிமுத்து, பொருளாளர் வதூத், மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read Previous

மது விற்பனை செய்தவர் கைது..!!

Read Next

மதுரை அருகே அரசு ஊழியரிடம் ரூ 10 லட்சம் மோசடி ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular