காலம் காலமாய் திருமணத்திற்கு பிறகு மனைவிகளை தனக்கு ஏற்றார் போல் மாற்ற நினைக்கும் கணவரா நீங்கள், மனைவியை மாற்ற நினைக்காதீர்கள் அதற்கு பதிலாக உங்களை உங்கள் மனைவிக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ளுங்கள் வாழ்க்கை அழகாக மாறும்…
திருமணத்திற்கு பிறகு எனக்காக என் மனைவி மாற வேண்டும் என்று நினைக்கும் கணவர்கள் மத்தியில் நீங்களும் அவர்களைப் போல வா, கணவர்கள் என் தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை மனைவியானவள் தாய் தந்தை உடன் பிறந்தோர் நண்பர்கள் ஆசைகள் இறுதியில் தன் பெயரின் முதல் எழுத்து முதற்கொண்டு அனைத்தையும் இழக்கிறாள் கணவர்மார்கள் நீங்கள் அவளுக்காக எதையும் இழக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தயவு செய்து யாருக்காகவும் அவளை இழந்து விடாதீர்கள், உங்கள் தாய் தந்தைக்கு பிறகு உங்களுக்கு உயிர்விடும் மனது அவளுக்கு மட்டும் தான் உண்டு உங்கள் நண்பர்களுக்கும் அல்லது உங்கள் உறவினர்களுக்கும் அல்லது நீங்கள் தேடும் நபர்களோ உங்களுக்காக வருவதில்லை மனைவி என்ற பந்தமே ஆயுள் முழுவதும் உங்களை சுமக்கும்..!!