திருமணத்திற்கு ஆடை வாங்கிவரும்போது சோகம்; கார் – லாரி மோதி 2 குழந்தைகள், மணமகன் உட்பட 5 பேர் பரிதாப பலி.!!

ஆந்திர பிரதேசம் மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் ராணி நகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் லாரி -மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்ட இழந்த கார் ஒன்று சாலையில் தறிகட்டு இயங்கி தடுப்பு சுவரின் மீது மோதியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அவ்வழியே வந்த லாரியின் மீது கார் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிர் இழந்தனர்.

உயிரிழந்தவர்கள் அல்லி சாஹிப் (வயது 58), ரெஹானா பேகம்  (வயது 40), ஷேக் பாஷா (வயது 28), முகம்மத் (வயது 6), அமன் (வயது 4)  என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஷேக் பாஷாவுக்கு வரும் 27ஆம் தேதி திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக திருமணத்திற்கு ஹைதராபாத் சென்று ஆடை வாங்கிய குடும்பத்தினர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருமண வீட்டாரு என்னுடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

கங்குவா ரிலீஸ் எப்போ?? சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன முக்கிய பிரபலம்..!!

Read Next

தினமும் குடித்துவிட்டு அடி, உதை.!! பொறுக்க முடியாமல் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular