திருமணத்திற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் விவாதிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு அவற்றை விவாதிப்பதன் மூலம் அந்த உறவில் ஒற்றுமை பெருகும்..
இருவரும் எப்படி வாழ வேண்டும் என்று திட்டமிடுகிறீர்கள் என்பதை விவாதிப்பது நல்லது..
பெற்றோரின் பங்களிப்பு தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதிப்பது நல்லது..
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மணமக்கள் இருவரும் இல்லற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி மனம் திறந்து பேச வேண்டும் நேர்மையான அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்துவது முக்கியமானது..
அத்தகி விவாதம் திருமண வாழ்க்கையை தெளிவான கண்ணோட்டத்துடன் கட்டமைக்க உதவிடும். தடுமாற்றமோ கருத்து வேறுபாடு இன்றி சுமூகமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழிவகை
செய்திடும். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்களை பட்டியலிடுகிறோம்..
குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் திருமணத்திற்கு முன்னரே விவாதிப்பது நல்லது ஏனெனில் இருவரில் ஒருவர் குழந்தை பிறப்பை தள்ளி போட விருப்பலாம் அப்படி விரும்பினால் அதற்கான காரணத்தை விளக்குவதும் அவசியமாகும்..
திருமணத்திற்கு முன்பு துணை வேலைக்கு சென்று வந்திருக்கலாம் திருமணத்திற்கு பிறகு வேலையை தொட விருப்பப்படலாம். அவரின் கருத்துக்களை கேட்டு எறிந்து வேலை நேரம் வேலைக்கு சென்று வர ஆகும் பயண நேரம் துணையின் தனிப்பட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்து கொள்வது நல்லது..
திருமணத்திற்கு முன்பு வரை மணமகனோ மணமகளோ இருவரும் பெற்றோரின் ஆதரவில் தான் வசித்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு புகுந்து விட்டிருக்கு அடி எடுத்து வைக்கும் பெண் அங்கு புதிய உறவுகளுடன் பழகி ஆரம்பிக்க வேண்டி இருக்கும்..
இருவருமே தங்கள் திருமண வாழ்க்கையில் அவரவர் பெற்றோரின் பங்களிப்பு தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதிப்பது நல்லது..
இருவருக்கும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் நாள்பட்ட நோய்கள் அல்லது மரபணு சார்ந்த நோய் தாக்கங்கள் இருந்தால் அது பற்றி விவாதிப்பது நல்லது. அதிலிருந்து மீண்டு வரும் வழிமுறைகள் நோய்களை முற்றிலும் குணமாகும் தன்மை பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது..
வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் புதுமண தம்பதிகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் சச்சரவுகள் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை திருமணத்திற்கு முன்னரே கண்டறிவது சால சிறந்தது. அதற்கு ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இருவரும் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்..
இறை நம்பிக்கை விஷயத்தில் இருவரும் கருத்துக்களை பரிமாறி கொள்வது நல்லது. ஆன்மிக ஈடுபாடு கொண்டவராக துணை இருந்தால் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படுவது அவசியமானது..
குடும்பம் உறவுகளைப் பற்றி தெரிந்து கொள்வது போலவே இருவரும் அவரவர் நெருங்கிய நண்பர்களை பற்றியும் விவாதித்து அறிந்து கொள்ள வேண்டும் அந்த நட்பு எந்த அளவிற்கு ஆழமானது என்பதையும் விலக்கி விட வேண்டும்..
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இலக்குகள் இருக்கும் லட்சியங்கள் கனவுகள் இருக்கும் அது பற்றி பேசி தெரிந்து கொள்வதும் அதனை நிறைவேற்றுவதற்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதும் திருமண பந்தத்தை இன்னும் வலிமையாக்கும்..!!