திருமணத்தில் பின்பற்றப்படும் முக்கிய சடங்குகள்..!! திருமணம் என்பது ஒரு மனிதனும், இன்னொரு மனிதனும் (ஆண் – பெண்) இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்.
திருமணம் என்பது ஆண் பெண் என்ற இருமனம் இணைந்து ஒருமனமாகி அவர்களுக்குள் பரஸ்பர புரிதல் ஏற்பட்டு திருமணம் என்னும் பந்தத்திற்குள் செல்வார்கள். இந்நிலையில், திருமணத்தில் பின்பற்றப்படும் முக்கிய சடங்குகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமணத்தில் பின்பற்றப்படும் முக்கிய சடங்குகளில் நிச்சயதார்த்தமும் ஒன்று. நிச்சயதார்த்தம் என்பது பெண் வீட்டார் ஆண் வீட்டார் ஒன்று கூடி என் பொண்ணுக்கு இந்த மாப்பிள்ளை தான் என் பையனுக்கு இந்த பொண்ணுதான் என்று நிச்சயப்படுத்தும் ஒரு விழாவாக இந்த நிச்சயதார்த்தம் கருதப்படுகிறது. அடுத்து மாப்பிள்ளை அழைப்பு திருமணத்திற்கு முன்பு இந்த மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும். அடுத்து திருமணத்திற்கு முன்பு காப்பு கட்டுதல் என்ற ஒரு நிகழ்ச்சியும் நடைபெறும். திருமணத்தில் பின்பற்றப்படும் ஒரு சில முக்கிய சடங்குகளில் இந்த கன்னிகாதனமும் ஒன்று. திருமணம் முடிந்த பின்னர் அம்மி மிதித்தல் என்ற சடங்கை செய்வார்கள். இவ்வாறு திருமண சடங்குகள் நிச்சயதார்த்தத்தில் ஆரம்பித்து மாப்பிள்ளை அழைப்பு, காப்பு கட்டுதல், கன்னிகாதானம் மற்றும் அம்மி மிதித்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முடிவடைகிறது. குறிப்பு: இது பொதுவான சடங்கு. ஒவ்வொரு குடும்பமும் அவர்களின் முன்னோர்கள் காலகட்டத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக நடந்த சடங்குகளை பின்பற்றுவார்கள்.




